Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, May 26, 2013

இளைஞனே வா!

·        அறிவியல் உலகில் மனம்
அலைபாயும் மனிதா ? –
மடமையில் தோய்ந்தால்
அதை விலக்குதல் எளிதா ?.

·        கண்ணுக்கு எதிரே
கடலென நூல்கள்
மனம் புரட்டிட மறந்தால்
தொலைந்திடும் வாழ்நாள்.

·        காற்றிலே ஏறினாய்.
விண்ணையே தாண்டினாய்.
கடலினுள் மூழ்கியே
முத்தையே ஏந்தினாய்.

·        அத்தனை ஆற்றலும்
மொத்தமாய் உன்னிடம்.
குத்தகை எடுப்பதா ?
மடமைகள் நெஞ்சிடம்.

·        பல்லியைக் கண்டு நீ
புலி எனப் பதறலாம்.
தன்னினம் அழிவதைக்
காணாதிருக்கலாம்.

·        அச்சத்தில் வாழ்பவன்
ஆசைக்கு அடிமை.
ஆசையே வாழ்வானால்
அதுதான் கொடுமை.

·        மடமையே மனிதனுக்கு
மாபெரும் நஞ்சு.
அதை நீக்கிட அடைந்திடும்
நிம்மதியை நெஞ்சு .

·        பயில வா ! பயில வா !
பாடம் பல பயில வா.
நீக்க வா ! போக்க வா !
மடமையை நீக்க வா !