Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, September 21, 2013

கடவுள் ஒரு.................. கவிதை

                 கடவுள் ஒரு....

·     
           கடவுள் ஒரு வள்ளல்
ஆதியிலே
இவ்வுலகைப் படைத்தவன்
கூடவே மனிதர்களையும்
படைத்த பொழுது..

·        கடவுள் ஓர் அறிஞன்
குட்டை, நெட்டையென்று
சோடி சேர்த்து
சோதனைச் சாவடிகளில்
வாழ்க்கையென
ஒன்றை
உணர்த்திய பொழுது..

·        கடவுள் ஒரு புரோகிதன்
சேரவேண்டியதைப்
பிரித்து,
சேரக்கூடாததை
இணைத்து
இதுதான் வாழ்க்கையென்று
ஒரே மந்திரத்தை
உச்சரித்த பொழுது...

·        கடவுள் ஒரு வேடிக்கையாளன்
விரல்களை இழந்தவன்
கட்டுக் கட்டாய்
சலவைசெய்த
பாவ நோட்டுக்களை
வரதட்சணையாகப்
பெற்ற பொழுது.....

·        கடவுள் ஒரு சூத்திரதாரி
அவரவர் அர்த்தப்படுத்திய
வாழ்க்கையை
அகராதியில் தேடியும்
கிடைக்காத பொழுது
கிடைத்த அர்த்தங்களே
அவரவர் வாழ்க்கையென
படிப்பித்தபொழுது.....

·        கடவுள் ஒரு  நீதிமான்
அவரவர் விருப்ப
உணவுகளை
ஒரே பானையில்
தேடிய பொழுது
ஒரு பானை சமைத்ததே
உங்களுக்கான உணவென்று
உரைத்தபொழுது....

·        கடவுள் ஒரு கஞ்சன்
தேடலை அறிவாக்கி
திட்டமிட்டதை
அடையுமுன்னே
வாழ் நாள் முடிந்ததென்று
முடித்து வைத்த பொழுது....