Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, March 13, 2016

வியர்வையின் வாசம்

வியர்வையின் வாசம் 

பழுப்பேறிப்போன 
அம்மாவின் முகத்தில்
கவலை ரேகைகள்
படர்ந்து கிடந்தன.
நாட்களை எண்ணியபடி
நாடித்துடிப்பு!

அண்னாந்து பார்த்த
அம்மாவின்
கண்களில்
விட்டத்தில் ஓடும்
கடந்தகால நினைவுகள்.

ஆசையாய் ஊட்டிய
பால் பணியாரம்
வாய்க்கதுப்பின் வழி
வழிந்தோட,
அதைத்
துடைக்க நேரிடுகையில்
பருவக்கால நினைவுகள்
மெல்ல அரும்புகின்றன....

விபரம் தெரிந்த நாள் வரை
விடாப்பிடியாய்க்
குடித்து முடித்த
தாய்ப்பால்
கன்னக் கதுப்பில்
சிந்தும் போதெல்லாம்
நெடிய வியர்வையின்
நாற்றம் வீசும்
முந்தானையில் துடைத்தபடி
பாசமாய் பார்க்கும்
அம்மாவின் பார்வையில்
கனவுகள் பூக்கும்.

புல்லறுக்கச் செல்லும்போது
அம்மா
கைப்பிடித்துச் செல்கையில்
வீசிடும் பூமழையில்
அவள் முந்தானை குடையாக....
மழைத்துளியில்
சொட்டுச் சொட்டாய்
வியர்வை வாசம்
கரைந்து போகும்.

நடுங்கும் குளிர்வாடையில்
நள்ளிரவு நேரத்தில்
கிழிந்து கிடக்கும் முந்தானை
கதகதக்கும் போர்வையாகும்.

வாய்க்கால் வரப்புகளைத்
தம் காலால்
துவைத்துப் போட்டவள்
பஞ்சு மெத்தையில்
சுருண்டு கிடக்கிறாள்..
இப்போது ,

அம்மாவின் பார்வையில்
சத்து இல்லை.
அருகில் வாவென்றழைத்து
காதில் எதோ சொல்ல
முற்படுகையில்....

உடைந்து ஓடுகிற
என் கண்ணீரை
ஒற்றி எடுக்கும்
புடவைத்தலைப்பில்
வீசுகிற
வியர்வை வாசத்தில்
வலிகளைச் சுமந்து
வாழ்ந்து தொலைத்த
ஒரு மனுஷியின்
வரலாறு வாழ்கிறது.......Top of Form

Wednesday, March 2, 2016

சிலுவை சுமந்தவள்

சிலுவை  சுமந்தவள்
அலங்கரித்துக் கிடக்கிறது
கல்லூரி மேடை
ஆம்!
கலைவிழாத் தொடங்கிற்று.

பயின்ற கல்லூரிக்குள்
பலகாலம் சென்றாலும்
நீயும் நானும்
சந்தித்துக்கொண்ட
அந்தக்
கலைவிழாப்போட்டிகள்
வாழ்வின் கல்வெட்டுக்கள்.

இன்றோ ..
நான்கு பேர்
அழைத்துச்செல்ல
நடுவராக நான்..

பார்வை
மேடையில் பதிய
நினைவலைகள்
நீண்ட துரம்
பின்னோக்கி ஓடுகின்றன..

சக தோழனாக
உன்னோடு பயணித்த
காலங்கள்
வாழ்வின் வசந்தங்கள்..

புத்தாண்டு பிறந்து விட்டால்
உனக்குள் பிறக்கும்
கலையுணர்ச்சி….

போட்டிகளின் போது மட்டும்
நீயும் நானும்
எதிரும் புதிருமாய்..

நீ கலைமகளின்
வரம் வாங்கிப்
பிறந்தவளா என்ன ?
எல்லாம் உனக்கு
அத்துப்படி…..

உன் பெயரை
மேடையில்
உச்சரிக்கும்போதெல்லாம்
ஆர்ப்பரிக்கும் கரவொலி
அடங்க நேரமாகும்..

பாடலின் பல்லவியில்
பரிசினை உறுதி செய்வாய்..
தாளமிடும் பாவனையில்
உணர்ச்சிகளை உலவ விட்டு
உயிர்களை வதமிடுவாய் ..

ஆட்டப்போட்டிகளில்
அதிசயம் நிகழ்த்துவாய்.
புள்ளிமான் குட்டியெனத்
துள்ளியே
நீ குதிப்பாய் ..
கடைசி நிமிடங்களில்
குடை ராட்டினமாய்ச்
சுற்றிடுவாய்…

போட்டி முடிவுகள் முழுதும்
உன் முகவரிக்கே  சேரும்..
முணுமுணுக்கும் உதடுகளும்
உனைக்கண்டு
புன்முறுவல் பூக்கும்..

நாடகமேடையினில்
ஐம்புலன்களை
ஒன்று சேர்த்து
அதிசயம் நிகழ்த்துவாய்..

உன் தலை
குனியக் குனிய
கழுத்தில் சூட்டப்படும்
மெடல்கள்
தாளம் தட்டிப்பாடும்..

இறுமாப்புக் கொள்ளாமல்
வெள்ளந்தியாய் சிரிக்கும்
உன் சிரிப்பொலிகள்
கொஞ்சமும்
கலப்படமில்லாதவை
கர்வப்படாதவை…

காலத்தின் கோலம்
மெடல்கள் சுமந்த கழுத்து
தாலியைச் சுமக்க
உன் நினைவுகளை
என்னுள்
சுத்தமாய்த் 
துடைத்து விட்டுப் போனாய்..

பரதம் பயின்ற
உன் பாதம் படுமிடம்
கோயிலாகும்..
ஆனால்..
உனக்கு மட்டும்
என்ன ஆனதோ?

தாலி சுமந்த கழுத்து
சிலுவை பாரம் சுமந்ததா?
செல்லரித்துப் போன
கல்லூரிப் புகைப்படமானதா
உன் வாழ்வு ?

நீ நல்ல நடிப்புக்காரிதான்.
வீட்டிலும் வெளியிலும்
நன்றாக நடிக்கிறாய்..
ஒப்பனையில்லாமல்..

ஒன்றிரண்டு
தருணங்களில்
ஓரமாய் நின்று
பார்ப்பதன்றி
உறவென்று சொல்லிக்கொள்ள
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லாமல் போனது..

கண்களைக் கண்ணீர்
மறைக்க
நடுவராக என்னை
அறிமுகம் செய்கிறார்
நிகழ்ச்சிப் பொறுப்பாளர்..
எழுந்து சென்று
வணங்குகிறேன்
நீ நின்ற
இடத்தருகில்..

மனசு மட்டும்   மௌனமாக..
வாழ்க்கை வெறுமையாக..

சிலுவைகளை
நீ சுமக்க..
என் நெஞ்சில்

ஆணிகள் …a

Thursday, January 7, 2016

கலைப்போட்டிகளில் நடுவர்

தமிழ்ப்பல்கலைக்கழகம் ,தஞ்சாவூர்.07-01-2016 அன்று நடைபெற்ற பொங்கல் விழா கலைப்போட்டிகளில் நடுவராக


Tuesday, January 5, 2016

பயிற்சிப்பட்டறையில் சிறப்புரை


நேற்று 05.01.2015 பிற்பகல் 2.00 மணியளவில் CCRT ,Delhi ,தமிழக ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பண்பாடு மரபு  நோக்கில் தேசிய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் உரையாற்றியபோது..உடன் பயிற்சியாளர் திரு தேவதாஸ்,நண்பர் கவிஞர் பூவை சாரதி 


Friday, January 1, 2016

இணையச் செய்திகள்

WEDNESDAY, DECEMBER 11, 2013
காவேரிக்கரை என்றொரு வலைப்பூ.

"
கவிதை,கட்டுரை,கொஞ்சம் தத்துவம்,சில புகைப்படம் இப்படியா ஒரு சின்ன கிறுக்கல்கள்", இவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த வலைப்பூ' என்கிறார் புதிதாக வலைப்பூவை ஆரம்பித்து அழகழகான கவிதைகளை முயற்சித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் முனைவர் நா.சிவாஜி கபிலன்.

 
பாட மறக்கும் பாட்டு என்ற தலைப்பில், ஒப்பாரிப் பாடல் காணாமல் போனதால் தமிழனின் அருமருந்தான மனச்சுமையைக் குறைக்க முடியாமல் போய்விட்டதாகப் புலம்புகிறார். உண்மைதான், ஆராய்ச்சிகளும் அதைத்தானே சொல்கின்றன. இக்கவிதையில் வரும் அருக்காணி அக்கா மனதில் நிலைத்து நிற்கிறார்.

பெருந்தீ என்னும் தலைப்பில் இன்னொரு கவிதை. வெளியூரில் இருந்து புகைவண்டியில் வீடு திரும்பும் ஒரு இளைஞனின் கண்ணெதிரில் பசுமை சூழ்ந்த தன் கிராமம் இப்போது எப்படி வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதுதான் இக் கவிதை. நம்மையும் அவருடன் அவரது கிராமத்திற்கே அழைத்துச்சென்று விடுகிறார் கவிதையின் வாயிலாக.

தலைப்பில்லாமல் இங்கொரு கவிதை உள்ளது. இதிலுள்ள வரிகள் எவ்வளவு வலிமையானவை என்பதை வாசித்துப் பாருங்களேன்.இன்னும் நல்லநல்ல கவிதைகள் எழுதிட வாழ்த்துவோம்.
                              ...........................................................
KamatchiWed Dec 11, 12:10:00 PM
இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். காவேரிக்கரை,புத்தக அலமாரி இவை இரண்டும்தான் எனக்குப் புதிது. அதையும் ஓடிப்போய் ரஸித்துவிட்டு வந்தேன்.
ரஞ்ஜனி பதிவுலகம்பூராவும் நன்றாகத் தெரிந்தவர். ஸகலகலாவல்லி என்று நான் நினைத்துக் கொள்வேன்.
அஞ்சு அழகானதளம்,க்வில்லிங் கைவேலைகள்,சமையல் என்று அசத்தும்,அன்புடன் ஸ்நேகமனப்பான்மை கொண்டவர்.

அநு ஸ்ரீனி சொல்லவே வேண்டாம். . அத்தனை ரஸங்களும் எழுதுவதில் இருக்கும்..ஒரு எடுத்துக்காட்டான
மருமகள்.
காவேரிக்கரையும், புத்தக ஷெல்பின் ஒரு கவிதையும் படித்தேன். மிக்க அழகாக இருந்தது.
இனி எல்லோரையும் முடிந்தபோது தவராமல் பார்க்க வேண்டும் என்பது என் ஆவல்.
புதன் மலர் அழகாக பூத்திருக்கிறது. பொன் கிடைக்கும், புதன் கிடைக்காது. ஆக புதனின் தேர்வுகள்
அருமை. அன்புடன்
என் தோழி அனுவின் பதிவுகளை அறிமுகம் செய்ததற்கும் நன்றி. முதன் முதலாக அவரது தளம் இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கிறது. பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். சீக்கிரமே இங்கு வந்து நன்றி சொல்வார்.
காவிரிக்கரை, காகிதப்பூக்கள் இரண்டு தளங்களும் புதியவை. படித்துவிட்டு வருகிறேன். 


 தஞ்சாவூர் அடிப்படையில் இசைக்குரிய மண்:  கவிஞர் நந்தலாலா

First Published : 09 September 2013 09:15 AM IST
தஞ்சாவூர் அடிப்படையில் இசைக்கு உரிய மண் என்றார் கவிஞர் நந்தலாலா.
 தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முனைவர் இரா. சீனிவாசன் எழுதிய "சாத்திர நூல்களில் முப்பொருள் உண்மை', "இருண்ட வீடும் குடும்ப விளக்கும்', முனைவர் நா. சிவாஜி கபிலன் எழுதிய "கண்ணதாசன் நாவல்களில் உளவியல்', தஞ்சை நாட்டுப்புறக் கலைகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன.
 இவற்றை தி. ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள் நாவல்களில் காணலாம். அவர்தான் தஞ்சாவூர் மாவட்ட கலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். 
 மேலும், மாவட்டத்தில் உள்ள தாவரங்களைப் பற்றியும் வரிசைப்படுத்தியுள்ளார். 
 தஞ்சாவூர் அடிப்படையில் இசைக்கு உரிய மண். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. நாகசுரம், மிருதங்கத்துக்குப் பதிலாக இங்கு கேரள செண்டை மேளம் வாசிக்கப்படுகிறது. இதையும் மலையாளிகள் வந்து வாசிக்கவில்லை. நம்முடைய ஆள்களே அதைக் கற்று அவர்களைப்போல உடையணிந்து வாசிக்கின்றனர்.s
 இந்த நிலைமை தொடர்ந்தால் நாகசுரம், மிருதங்கக் கலைஞர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர வேண்டும். நாட்டுப்புறக் கலைகளை உற்று நோக்கினால் பல உண்மைகள் புரியும். அவையெல்லாம் நம் பண்பாட்டைச் சார்ந்தவை. எனவே, இவற்றை காப்பது நம் கடமை என்றார் நந்தலாலா. பூண்டி புஷ்பம் கல்லூரி தலைவர் உரு. ராசேந்திரன் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பா. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Advertisement
Click Here
தஞ்சையில் நூல்வெளியீட்டு விழா
Advertisement


ஆல்பம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011,00:35 IST
தஞ்சாவூர்: தஞ்சையில் மாணவர் வெற்றி பயணம் தொடர என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. பயிர் பதன தொழில்நுட்ப கழகம் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிங்காரவடிவேலு தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுனர் அன்பரசன் முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஹேமலதா வரவேற்றார். பூண்டி கல்லூரி பேராசிரியர்கள் சிவாஜிகபிலன், பன்னீர்செல்வம், வானவில் மாதர் சங்க தலைவர் புவனேஷ்வரி ஆகியோர் பேசினர். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் "வசந்த வாய்ப்புகள்', என்ற நூலை வெளியிட்டு, மாணவர்களை வாழ்த்தி பேசினார். நூலாசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
Click Here
பூண்டி புஷ்பம் கல்லூரி கலைவிழா போட்டி தருமபுரம் ஆதீனம் கல்லூரிக்கு சுழற்கேடயம்
தினமலர் – தி, 20 பிப்., 2012s
தி, 30 டிச., 2013
தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரி கலைவிழா போட்டிகளில் அதிக
புள்ளிகள் பெற்ற தருமபுரம் ஆதீனம் கல்லூரி சுழற்கேடயத்தை வென்றது.
தஞ்சை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரியில் புஷ்பமாலா 2012 மாநில அளவிலான
கலை ப்போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சின்னையன் பங்கேற்று துவக்கி
வைத்தார். மே லாண்மை இயக்குநர் காமராஜ் வாழ்த்தி பேசினார். கலை போட்டிகளில்
தமிழகம் முழுவதும் இருந்து 600 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், மெல்லிசை, பலகுரல்,
தோல்கருவி, கிராமிய பாடல்கள், குழு நாடகம், கர்நாடக ஸங்கீதம்,
மாறுவேடப்போட்டி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நடுவர்களாக தியாகராஜ
சர்மா, வக்கீல் மோகன்குமார் சாம்சன், பேராசிரியர்கள் கலியபெருமாள்,
ரவிக்குமார், நந்தகுமார், பேராசிரியை சாந்தி ஆகியோர் தேர்வு செய்தனர்.
இதில் அதிக போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 76 புள்ளிகள் பெற்று, மயிலாடுது
றை தருமபுரம் ஆதீனம் கø லக்கல்லூரி சுழற்கோப்பையை தட்டிச்சென்றது. நிறைவு
விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக் கு, நடிகர் ராஜேஷ்,
டைரக்டர் சற்குண ம் ஆகியோர் பரிசு வழங்கினர்.விழாவில், கல்லூரி செயலாளரும்,
தாளாளருமான துளசி அய்யா வாண்டையார், நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி
வாண்டையார், கல்லூரி முதல்வர் சின்னையன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்
கரிகாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். பொருளாதாரத்துறை துறைத்தலைவர்
ராஜேந்திரன், பேராசிரியர்கள் பழனிவேலு, பேராசிரியர் நடராஜன், வீரசிகாமணி,
கவின்கலை மன்ற துணைத்தலைவர் சிவாஜிகபிலன், பேராசிரியை மாலதி ம ற்றும்
பேராசிரியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்
February 24, 2013  03:21 pm
தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் புஷ்பமாலா-2013 நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவை கல்லூரி செயலாளர் துளசி அய்யா வாண்டையார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது- 



நான் எழுதிய ஓரு பாட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே அந்த பாடலுக்கு கூட 1000 பூக்கள் கிடைக்க வில்லை. 100 பூக்கள் மட்டும் வைத்துதான் படமாக்கப்பட்டது. 1000 தாமரைகள் (மாணவர்கள்) ஓரே இடத்தில் குவிந்து கும்மி கொட்டுவது (கைதட்டுவது) பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.



மேற்கு உலகம் அமெரிக்காஐரோப்பியா என்றும் கிழக்கு உலகம் ஆசியா என்றும் என இரண்டாக பிரிந்து கிடந்தது. ஏனென்றால் மேற்கு உலகம் பெண்ணுக்கு உரிமை கொடுத்து இரட்டை சிறகால் பறக்க ஆரம்பித்தது. எந்த ஒரு பறவையும் இரட்டை சிறகால் பறந்தால் தான் அதன் இலக்கை அடைய முடியும். நம்நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பதவிகல்வி என்ற ஒற்றை சிறகால் பறந்துகொண்டிருப்பதை முறியடித்து பெண்கள் இரட்டை சிறகால் பறந்து இமயத்தின் உச்சியை தொட்டு கொண்டு இருக்கிறார்கள்.



இன்னும் அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் இரண்டே இரண்டு வல்லரசுகள் மட்டும் தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஓன்று சீனாமற்றொன்று இந்தியா. இதில் சீனாவுக்கு வாய்ப்பு அதிகமாஇந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாஎன்று கேட்டால் சீனாவை விட இந்தியாவுக்குதான் வாய்ப்பு அதிகம்.காரணம் சீனாவில் 60 சதவீதம் பேர் முதியவர்கள் 40 சதவீதம் பேர் இளையவர்கள். இந்தியாவில் 60 இளையவர்கள் 40 சதவீதம் முதியவர்கள்.

வாழ்க்கையில் ஒருவன் தன்னை தானே செதுக்கி கொள்ள வேண்டும். மூளையும் உழைப்பும் ஒன்று சேர உழைக்கிறவனே வெற்றி பெறுகிறான். மாணவர்களாகிய உங்களுக்கு வாழ்க்கையில் லட்சியம் வேண்டும். எதை பார்த்தாலும் கேள்வி கேட்க உங்களை உருவாக்கி கொள்ளுங்கள்.



நீங்கள் (மாணவர்களே) நேர்மையாக இருக்கிறீர்கள் பொய்சொல்லுவதற்கு கூசுகிறீர்கள். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது பொய்சொல்வதும் நேர்மை குறைவாக இருப்பதும் நான் பார்த்தேன். அந்த பழக்க வழக்கத்தில் நானும் கூட பொய்சொன்னேன். அந்த பொய் யாரையும் தீர்ப்பதற்காக அல்லஅந்த பொய் யாரையும் கேடுப்பதற்காக அல்ல. ஆனால் அந்த பொய்யிலிருந்து என்னை முற்றிலும் வெளியேற்றினேன். 




உண்மையான வாழ்க்கையில் பொய் வராது. துணிச்சலான வாழ்க்கையில் பொய் வராது,பொய்யற்ற வாழ்க்கை வாழ வேண்டும். ஆசிரியர்களேபெற்றோர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை இந்த கள்ள கபட மற்ற மாணவ கண்மணிகளை நீங்கள் சந்தேகப்படாதீர்கள்.

இன்றைய இளையவர்கள் படித்து விட்டு 10 ஆயிரம். 50 ஆயிரம் சம்பளம்கார். வீட்டில் ஏசிஒரு குழந்தை இது சராசரி வழ்க்கை. இதைவிட்டு நீங்கள் வரவேண்டும். ஊழற்ற ஒரு இந்தியாவை உங்களால் உருவாக்க முடியும். மாணவ மாணவர்கள் கல்வி படிப்பை முடித்து வாழ்க்கையில் ஒரு ஏணிபடியை ஏற்படுத்திக் கொண்டு பொது வாழ்கைக்கு(அரசிலுக்கு) வரவேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய கவிஞர் என்ற பட்டத்தை பூண்டி புஷ்பம் கல்லூரி செயலாளர் துளசி அய்யாவாண்டையார் வழங்கினார். பூண்டி புஷ்பமாலா2013 போட்டியில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு செயலாளர் துளசிஅய்யாவாண்டையார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். 



விழாவில் து.கிருஷ்ண சாமி வாண்டையார்கலைப்புலத் தலைவர் ராஜேந்திரன்,அறிவியல் புலத்தலைவர் பால சுப்பிரமணியன்இயக்குனர் காமராஜ்தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கரிகாலன்தரக்கட்டுப் பாட்டு அலுவலர் உதயகுமார்அலுவலக மேலாளர் துரைராஜ்டாக்டர். வீரையன்ஆசிரியர் நலச்சங்க செயலாளர் சி.சந்திரன் மற்றும் ஆசிரியஆசிரியைகள்மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியை ஆர்.சாந்தி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவின் கலைமன்ற துணைத்தலைவர் சிவாஜிகபிலன்பேராசிரியை மாலதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வீரசிகாமணி நன்றி கூறினார். 
·        ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்: கவிஞர் வைரமுத்து
·        
·        தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் புஷ்பமாலா-2013 நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவை கல்லூரி செயலாளர் துளசி அய்யா வாண்டையார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது-நான் எழுதிய ஓரு பாட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே அந்த பாடலுக்கு கூட 1000 பூக்கள் கிடைக்க வில்லை. 100 பூக்கள் மட்டும் வைத்துதான் படமாக்கப்பட்டது. 1000 தாமரைகள் (மாணவர்கள்) ஓரே இடத்தில் குவிந்து கும்மி கொட்டுவது (கைதட்டுவது) பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.

மேற்கு உலகம் அமெரிக்கா, ஐரோப்பியா என்றும் கிழக்கு உலகம் ஆசியா என்றும் என இரண்டாக பிரிந்து கிடந்தது. ஏனென்றால் மேற்கு உலகம் பெண்ணுக்கு உரிமை கொடுத்து இரட்டை சிறகால் பறக்க ஆரம்பித்தது. எந்த ஒரு பறவையும் இரட்டை சிறகால் பறந்தால் தான் அதன் இலக்கை அடைய முடியும். நம்நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பதவி, கல்வி என்ற ஒற்றை சிறகால் பறந்துகொண்டிருப்பதை முறியடித்து பெண்கள் இரட்டை சிறகால் பறந்து இமயத்தின் உச்சியை தொட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் இரண்டே இரண்டு வல்லரசுகள் மட்டும் தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஓன்று சீனா, மற்றொன்று இந்தியா. இதில் சீனாவுக்கு வாய்ப்பு அதிகமா? இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமா? என்று கேட்டால் சீனாவை விட இந்தியாவுக்குதான் வாய்ப்பு அதிகம்.காரணம் சீனாவில் 60 சதவீதம் பேர் முதியவர்கள் 40 சதவீதம் பேர் இளையவர்கள். இந்தியாவில் 60 இளையவர்கள் 40 சதவீதம் முதியவர்கள்.

வாழ்க்கையில் ஒருவன் தன்னை தானே செதுக்கி கொள்ள வேண்டும். மூளையும் உழைப்பும் ஒன்று சேர உழைக்கிறவனே வெற்றி பெறுகிறான். மாணவர்களாகிய உங்களுக்கு வாழ்க்கையில் லட்சியம் வேண்டும். எதை பார்த்தாலும் கேள்வி கேட்க உங்களை உருவாக்கி கொள்ளுங்கள்.

நீங்கள் (மாணவர்களே) நேர்மையாக இருக்கிறீர்கள் பொய்சொல்லுவதற்கு கூசுகிறீர்கள். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது பொய்சொல்வதும் நேர்மை குறைவாக இருப்பதும் நான் பார்த்தேன். அந்த பழக்க வழக்கத்தில் நானும் கூட பொய்சொன்னேன். அந்த பொய் யாரையும் தீர்ப்பதற்காக அல்ல, அந்த பொய் யாரையும் கேடுப்பதற்காக அல்ல. ஆனால் அந்த பொய்யிலிருந்து என்னை முற்றிலும் வெளியேற்றினேன்.

உண்மையான வாழ்க்கையில் பொய் வராது. துணிச்சலான வாழ்க்கையில் பொய் வராது, பொய்யற்ற வாழ்க்கை வாழ வேண்டும். ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை இந்த கள்ள கபட மற்ற மாணவ கண்மணிகளை நீங்கள் சந்தேகப்படாதீர்கள்.

இன்றைய இளையவர்கள் படித்து விட்டு 10 ஆயிரம். 50 ஆயிரம் சம்பளம், கார். வீட்டில் ஏசி, ஒரு குழந்தை இது சராசரி வழ்க்கை. இதைவிட்டு நீங்கள் வரவேண்டும். ஊழற்ற ஒரு இந்தியாவை உங்களால் உருவாக்க முடியும். மாணவ மாணவர்கள் கல்வி படிப்பை முடித்து வாழ்க்கையில் ஒரு ஏணிபடியை ஏற்படுத்திக் கொண்டு பொது வாழ்கைக்கு(அரசிலுக்கு) வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய கவிஞர் என்ற பட்டத்தை பூண்டி புஷ்பம் கல்லூரி செயலாளர் துளசி அய்யாaவாண்டையார் வழங்கினார். பூண்டி புஷ்பமாலா 2013 போட்டியில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு செயலாளர் துளசிஅய்யாவாண்டையார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் து.கிருஷ்ண சாமி வாண்டையார், கலைப்புலத் தலைவர் ராஜேந்திரன், அறிவியல் புலத்தலைவர் பால சுப்பிரமணியன், இயக்குனர் காமராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கரிகாலன், தரக்கட்டுப் பாட்டு அலுவலர் உதயகுமார், அலுவலக மேலாளர் துரைராஜ், டாக்டர். வீரையன், ஆசிரியர் நலச்சங்க செயலாளர் சி.சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியை ஆர்.சாந்தி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவின் கலைமன்ற துணைத்தலைவர் சிவாஜிகபிலன், பேராசிரியை மாலதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வீரசிகாமணி நன்றி கூறினார்.